முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவம்பர் 22-ல் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர்

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2012      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 27 - பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 22 ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்த விவகாரம் குளிர்கால கூட்டத் தொடரில் பரபரப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்ற விவகாரத்துக்கான அமைச்சரவை குழு ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் டெல்லியில் கூடியது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் 22 ம் தேதி கூட்டுமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நவம்பர் 22 ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20 ம் தேதி வரை கூட்டத் தொடர் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கால கூட்டத் தொடரில் தினசரி அமளியும், ஒத்திவைப்பும்தான் முக்கிய அம்சமாக இருந்தது. மத்திய அரசு தனியாருக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்ததில் 1,86,000 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டது. இதன் காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ்ஈடுபட்டனர். இதனால் அவைகள் முடங்கின.

இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் விவகாரம்,வதேரா விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கட்சிகள் கிளப்ப உள்ளன. ஏற்கனவே சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய தீர்மானம் கொண்டு வரப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், கூட்டத் தொடர் பெரும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்