முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானி மயக்கம்: விமானத்தை பாதுகாப்பாக இறக்கிய இளைஞர்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

கேன்பெர்ரா, ஜன.28 - விமானி மயங்கியதால் விமானத்தை இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக தரையில் இறக்கினார். ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் டெரக் நெவிலி. விமானி ஆகப் பணியாற்றினார்.

இவர் செஸ்னா 150 ரக விமானத்தை ஓட்டினார். அது ஒரு எஞ்சின் மட்டுமே பொருத்தப்பட்ட எடை குறைந்த விமானமாகும். இவருடன் ஜென்கின்ஸ் என்ற 19 வயது இளைஞரும் சென்றார். திடீரென விமானி  மயங்கினார். அப்போது தனக்கு உதவுமாறு உதவி கேட்டார். இதை மைக்கில் தெரிவித்தார். உடனே ஜென்கின்ஸ் விரைந்து சென்று விமானத்தை ஓட்டி 30 நிமிடம் வானில் வட்டமடித்தார்.  

தரையிலிருந்து கொடுக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி அவர் விமானத்தை இயக்கி பத்திரமாக தரை இறக்கினார். பின்னர் விமானியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்