முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் பேட்மிண்டன் இந்தோனேஷியா வீரர் சாம்பியன்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சிங்கப்பூர், ஏப்.15 - சிங்கப்பூர் ஒபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் இறதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் மலேசியாவின் சோங் வெய் லீ அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 

அவரை 52 ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் சிமோன் சான்டோசோ 21-15, 21-10 என்ற நேர் செட்டில் வென்று கோப்பையை கைப்பற்றினார். சோங் வெய்லீயை 11-வது முறையாக சந்தித்த சிமோன் அதில் பதிவு செய்த 2-வது வெற்றி இதுவாகும். பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஒவிம்பிக் சாம்பியன் சீனாவின் சூய்ருக் லிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

அவரை சக நாட்டவரான 3-ம் நிலை வீராங்கனை யுஹான் வாங் 21-11,21-9 என்ற நேர் செட்டில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தட்டிசென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்