முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி லட்டில் கல்: பக்தர் அதிர்ச்சி

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, ஜூலை.2 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டில் கல் இருந்தது. இதனைக் கண்ட பக்தர் கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாகவும், சலுகை விலை மற்றும் வெளி மார்க்கெட் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. லட்டு பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் தினமும் காத்திருக்கின்றனர். இந்த லட்டு பிரசாதம் உலகப்புகழ் பெற்றதாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் தனது குடும்பத்துடன் ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் பிரசாத லட்டை வாங்கிகொண்டு அவர் தனது குடும்பத்துடன் தங்கியிருந்த விடுதிக்கு சென்று லட்டு பிரசாதத்தை சாப்பிட எடுத்த போது அதில் கல் இருந்ததாக தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கோவிலுக்கு வந்து அந்த லட்டை தேவஸ்தான அதிகாரிகளிடம் காண்பித்து புகார் செய்தனர்.

இதுகுறித்து, பக்தர்கள் சிலர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து பக்தியுடன் பிரசாத லட்டுவை வாங்கி செல்கின்றனர். ஆனால், லட்டு செய்யும் போது தேவஸ்தான பணியாளர்கள் அலட்சியமாக இருப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு முன்பும் லட்டு பிரசாதத்தில் ஆணி மற்றும் மரக்கட்டை துண்டுகள் போன்றவை இருந்துள்ளது. எனவே, லட்டு தயாரிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

தேவஸ்தான அதிகாரி கூறுகையில், இனிமேல் பிரசாதத்தில் இவ்வாறு கல், ஆணி போன்றவை இருக்காது என உறுதியளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்