முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத்குமார் பிறந்தநாள்: வடசென்னையில் நலத்திட்ட நிகழ்ச்சிகள்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.14 - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாருக்கு இன்று 60–வது பிறந்தநாள். இதையொட்டி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடசென்னை மாவட்ட செயலாளரும், சென்னை மண்டல செயலாளருமான எம்.ஏ.சேவியர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் டி.மகாலிங்கம் ஆகியோர் சார்பில் வட சென்னையில் பெரம்பூர், ராயபுரம், ஆர்.கே.நகர், கொளத்தூர் துறைமுகம் பகுதிகளில் இன்று ஏழைகளுக்கு உதவிகள் நடத்திட்டங்கள் வழங்கும் 60 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பட்டிமன்றம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு, கொடியேற்றுதல், தெருமுனைக் கூட்டம், அன்னதானம், பல் சிகிச்சை முகாம், சைக்கிள் போட்டி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், கிரிக்கெட் போட்டி, ஏழை மாணவர்களுக்கு பள்ளி சீருடை, பை வழங்குதல், மரக்கன்று நடுதல், கண்தானம், உடல் உறுப்பு தானம், கோலப்போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் நாதன், பொன்னரசன், ராஜா, பிரசாத், பகுதி செயலாளர்கள் முருகேசபாண்டியன், விஜயன், ஸ்ரீரஞ்சன், ராஜசேகரன், ஸ்டான்லி மணி, மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஏ.பி.எஸ். பொன்னரசன் தலைமையில் கொடியேற்று விழா, 1060 பேருக்கு அன்னதானம், வேட்டி–சேலை, மாணவ– மாணவிகளுக்கு சிலேட்டு, நோட்டு புத்தகம், வடபழனி கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதில் துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ., பொது செயலாளர் கரு.நாகராஜன், மாநில பொருளாளர் சுந்தரேசன் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாநில இளைஞர் அணி செயலாளர் ஐஸ்அவுஸ் தியாகு, ஆதித்தன், விஜய், துரைமணி கலந்து கொள்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்