முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்

வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, ஜூலை.19 - திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி அடுத்த மாதம் முதல் அமலாக உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்களில் சிலர் ரூ.300 க்கான சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் அதிகம் கெட் வழங்குவது நிறுத்தப்படுகிறது. அப்போது பக்தர்கள் சாதாரண பக்தர்கள் செல்லும் வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானை தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தபோது, சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதன்பேரில் கோயிலுக்குள், பக்தர்கள் வரும் வரிசை, அவர்களுக்கு வழங்கப்படும் அன்னபிரசாதம் மற்றும் வசதி குறித்து தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எம்.ஜி.கோபால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் தலைமை செயல் அலுவலர் கோபால் கூறியதாவது:

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பக்தர்கள் 3 வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்யும் முறை மேற்கொள்ளப்பட்டது. இதனால் குறைந்த நேரத்தில் அதிக பக்தர்கள் தரிசனம் செய்ய முடிகிறது ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த டிக்கெட்டுகள் பெறபக்தர்கள் கோயிலுக்கு வந்த பின்னர், அதற்கான வரிசையில் சென்று நடு வழியில் டிக்கெட் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் பல சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவித்தனர். எனவே பல மாநிலங்களில் உள்ள இதர்ஷன் மையங்களில் ரூ.50க்கான சர்வதரிசன டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதேபோல் விரைவில் ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒன்று, 7 அல்லது 14 நாட்களுக்கு முன்பு பதிவு செய்ய திட்டம் மேற்கொள்ளப்படும். இதில் ஒரு நாளைக்கு எத்தனை டிக்கெட் வழங்க வேண்டும். எந்தெந்த பகுதியில் வழங்க வேண்டும் என ஆய்வு செய்யப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்