முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா திட்டம் மூலம் 33 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.23 - அம்மா திட்டம் மூலம் 33 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை நிலுவையில் மனுக்கள் ஏதுமில்லை எனவும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திமுக எம்.எல்.ஏ. சுப்.தங்கவேலன் எழுப்பிய வினாவுக்கு அமைச்சர் உதயகுமார் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் மட்டும் இதுவரை 34 புதிய வட்டங்கள் ஏற்படுத்திப்பட்டுள்ளது. புதிதாக ஒரு வருவாய் வட்டத்தை உருவாக்க, அந்த வட்டமானது 250 முதல் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் வரையிலும், 1 லட்சம் முதல் 5.5 லட்சம் வரை மக்கள் தொகையும், 30 வருவாய் கிராமங்களும் இருப்பது அவசியம்.

புதிய வருவாய் வட்டங்களைப் பிரிப்பதற்கு வருவாய் நிர்வாக ஆணையம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அரசுக்கு தரும் அறிக்கையின் அடிப்படையில் புதிய வட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் பொது மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 33 லட்சத்து 13 ஆயிரத்து 792 மனுக்கள் பெறப்பட்டு அவை முழுவதும் சதீர்வு செய்யப்பட்டுள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்