முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்

புதன்கிழமை, 30 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி, ஜூலை 31 - ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முக்கியமானது ஆடிப்பூர திருவிழா. ஆண்டுதோறும் தேரோட்டத்துடன் நடைபெறும் இந்த திருவிழா இந்த ஆண்டு கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஆடிப்பூர நாளான நேற்று நடைபெற்றது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட தேருக்கு காலை 5 மணிக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரின் முன்புறம் இணைக்கப்பட்டிருந்த 9 வடங்களையும் பக்தர்கள் திரளாக தாங்கி தேர் இழுத்தனர். இதில் 2 வடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தன. ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜாவும் இதில் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஹரிகரன், பொன்னுபாண்டியன், சுந்தர்ராஜன் எம்எல்ஏ, ஏடிஐஜி மகேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கோவில் தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் ராமராஜா மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு ஆண்டாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுச்சேலை, வஸ்திரம் மற்றும் மாலைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அவை ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னாருக்கு அணிவிக்கப்பட்டன. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி ராமராஜா மற்றும் அதிகாரிகள் செய்து இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்