முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச தரப்பட்டியலில் 5 இந்திய நிறுவனங்கள்

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், ஆக.23 - புதுமையான செயல்பாட்டு முறைகளின் அடிப்படையில் உலகின் 100 சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 5 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்புதுமையான முறையில் செயல்படும் நிறுவனங்கள் பட்டியலை அமெரிக்க பத்திரிக்கை ஒன்று ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் 5 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளனர். சோப், பேஸ்ட், தேயிலை, காபி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் 14-ஆம் இடத்தில் உள்ளது. தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 57-ஆம் இடத்தில் உள்ளது. கட்டுமான தொழிலில் ஈடுபட்டுவரும் லார்சன் அண்ட் டூப்ரோ 58-வது இடத்திலும், மருந்து தயாரிப்பு நிறுவனமான சன்ஃபார்மா 65-ஆம் இடத்திலும், பஜாஜ் ஆட்டோ 96-ஆம் இடத்திலும் உள்ளனர்.

நிறுவனங்களின் வாடிக்கையாளர் தொடர்பான சேவைகளை கையாண்டு வரும் சேல்ஸ்ஃபோர்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம் நான்கு வருடங்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்