முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும்: இஸ்ரேல்

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

டெல்அவிவ்,ஆக.24 - தெற்கு இஸ்ரேல் பகுதியில், ஹமாஸ் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 4 வயது குழந்தை பலியானதாக இஸ்ரேல் செஞ்சுலுவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஸா முனையிலிருந்து, நேற்றுமுன் இரவு தெற்கு இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் நடத்தியத் தாக்குதலில், மழலையர் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த கார் தகர்க்கப்பட்டது. இதில் காரில் இருந்த 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானதாக இஸ்ரேல் செஞ்சுலுவை சங்கத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகு விடுத்துள்ள எச்சரிக்கையில், "ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதில் தரப்படும்" என்றார்.

காஸா - இஸ்ரேல் இரு தரப்பிலும் நடந்துவரும் பிரச்சினையில் எகிப்து தலையிட்டு, போர் நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இரு தரப்பினருக்கும் உடன்பாடி ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்