முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதிபலிப் பான்களுடன் சாலைத் தடுப்புகள்: உறுதிசெய்ய உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 27 – சென்னையில் தேவையான இடங்களில் பிரதிபலிப்பான்களுடன் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஐ.பிரகாஷ்ராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்:

சென்னையில் சாலையின் பல இடங்களில் எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை, ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளன.

சாலையைப் பயன்படுத்துவோருக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் தேவையில்லாத இடங்களில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வியாபார நோக்கத்தின் அடிப்படையில் வியாபாரிகள் விளம்பரங்களுக்காக இந்த சாலைத் தடுப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இது தவிர, இரவு நேரங்களில் வாகன விளக்கின் வெளிச்சம் போதிய அளவில் இல்லாததால், இந்த சாலைத் தடுப்புகள் இருப்பது தெரிவதில்லை.

எனவே, விபத்துகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள சாலைத் தடுப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சாலைத் தடுப்புகள் பிரதிபலிப்பான்களுடன் தேவையான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை போலீஸார் உறுதி செய்ய வேண்டும்.

இதை அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் முடித்து, அதற்கான அறிக்கையை நவம்பர் 27-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்