முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவி சிகிக்சைக்கு ஏற்பாடு செய்த முதல்வருக்கு நன்றி

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

 

 

சென்னை, ஆக.29 - ஆரணியை சேர்ந்த செல்வி யுவராணி என்ற மாணவிக்கு கண்ணிலிருந்து மணல் துகள்கள் வருவதாக வந்த பிரச்சினைக் குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்அடிப்படையில் சிறப்பு கண் சிகிக்சைக்கான ஏற்பாடு குறித்து

பத்திரிக்கைச் செய்தியில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகரபாளையத்தில் வசிக்கும் சேகர் என்பவரின் மகள் செல்வி யுவராணி (வயது 12) கண்ணிலிருந்து மணல் துகள்கள் வருவதாகவும் அதற்குரிய மேல்சிகிச்சையினை அன்னாரின் குடும்பம் எதிர்பார்ப்பதாகவும் அறிந்து முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அந்த பெண்ணை சென்னையில் உள்ள பிரபல உதி கண் மருத்துவமனையில் அனுமதித்து தகுந்த பரிசோதனை செய்து அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்க ஆணையிட்டுள்ளார்கள், அதன் அடிப்படையில் செல்வி யுவராணி அவர்களின் ஊரான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகரபாளையத்திலிருந்து இரவோடு இரவாக சுகாதார துறை அலுவலர்களால் வரவழைக்கப்பட்டு நேற்று அதிகாலை உதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வி யுவராணியை பிரபல கண்மருத்துவர் டாக்டர் ரவீந்திரன் தலைமையில் தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பிலும் சிகிச்சையும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்பேரில்அளிக்கப்பட்டு வருகிறது. செல்வி யுவராணி 07.08.2014ம் தேதியிலிருந்து அவ்வப்போது அவரது கண்ணில் இருந்து மணல் துகள்கள் வருவதாகவும், முதலில் அகரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அதற்குப் பின் ஆரணியில் உள்ள தனியார் கண்மருத்துவமனையிலும் மற்றும் வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையிலும் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் வீடு திரும்பியபின் மீண்டும் இந்த மாதிரி கண்ணில் இருந்து மணல் துகள்கள் வருவதாக கூறியுள்ளதை அறிந்து முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்பேரில் இந்த நபர் உதி கண்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்றுவருகிறார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்திரவின்பேரில் செல்வி யுவராணிக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இதற்காக அவரது குடும்பத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க தங்களது நன்றியை தெரிவித்தனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்