முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சிக்கு திரும்பிய அமர்சிங்குக்கு எம்.பி பதவி: முலாயம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.01 - மீண்டும் சமாஜ்வாடி கட்சிக்கு திரும்பிய அமர் சிங்குக்கு எம்.பி.பதவி அளிக்க முலாயம் சிங் முடிவு செய்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர் அமர்சிங். கட்சியில் முலாயம்சிங் யாதவுக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் இருந்தார். முலாயம் சிங்குக்கு மிகவும் நெருக்கமானவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் விளங்கினார். ஆனால், நாளடைவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், முலாயம் சிங் தனது மகன் அகிலேஷ் அரசியலுக்கு கொண்டு வந்தார். முலாயம்சிங்கின் சகோதரர் மகன் ராம் கோபால் யாதவ், அசம்கான் ஆகியோர் கை ஓங்கியது.

இதனால் அமர்சிங் சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். அவருடன் நடிகை ஜெயப்பிரதா மற்றும் சில நிர்வாகிகளும் விலகி புதிய கட்சியில் இணைந்தனர். ஆனால், இந்த புதிய கட்சிக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு செல்வாக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் உத்திரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ் வாடி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அகிலேஷ் முதல் மந்திரியானார்.

இதற்கிடையே அமர்சிங் மீண்டும் முலாம்சிங்குடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். சமீபத்தில் லக்னோவில் நடந்த ஒரு விழாவில் முலாயம்சிங்கும், அமர்சிங்கும் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்றவது என்ற முடிவு செய்தனர். அதே சமயம் ராம்கோபால் யாதவ், அசம்கான் ஆகியோரின் நெருக்கடியை சமாளிக்கலாம் என்றும் திட்டமிடிடுள்ளார்.

தற்போது அமர்சிங் டெல்லி மேல் சபை எம்.பி.யாக இருக்கிறார். அவரது பதவி காலம் வருகிற செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. அவரை மீண்டும் மேல் சபை எம்.பி.யாக்கி கட்சியில் சேர்த்துக் கொள்ள முலாயம்சிங் முடிவு செய்துள்ளார். அகிலேஷ்யாதவ் ஆட்சி மீது மாநிலத்தில் அதிருப்பதி நிலவுகிறது. அமர்சிங்கின் ஆலோசனைகளால் தான் ஏற்கனவே சமாஜ்வாடி கட்சிக்கு வெற்றிகள் கிடைத்தது. அமர்சிங் வருகையால் கட்சி புத்துயிர் பெறும் என்று முலாயம்சிங் யாதவ் கூறுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்