முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் மணிநகர் - வதோதராவில் ஓட்டுப்பதிவு குறைந்தது

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

காந்திநகர், செப் 15 - குஜராத்தில் மோடி இல்லாததால் மணிநகர், வதோதராவில் ஓட்டுப்பதிவு குறைந்தது.

நாடு முழுவதும் காலியாக உள்ள 33 சட்டசபை தொகுதி, வதோதரா, மயின்புரி, மேடக் ஆகிய 3  பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் குஜராத்தின் வதோதரா பிரதமர் மோடி வெற்றி பெற்ற தொகுதியாகும். வாரணாசியை தக்க வைத்துக் கொண்டு வதோதரா தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. இதே போல மோடி குஜராத் முதல் மந்திரியாக இருந்த போது மணிநகர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.பி. தேர்தலில் போட்டியிட்டதால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மணிநகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. ஆனால் நேற்று முன்தினம் மணிநகரிலும், வதோதராவிலும் ஓட்டுப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. இதனால் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது. வதோதரா எம்.பி. தொகுதியில் பிரதமர் மோடி நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருந்தார். நேற்று முன்தினம் நடந்த இடைத் தேர்தலில் 41.5 சதவீத ஓட்டுகளே பதிவானது. இதே போல் மணிநகரில் 2012 சட்டசபையில் மோடி 1,30,470 வாக்குகள் பெற்றிருந்தார். ஓட்டு பதிவு சதவீதம் 70.78 சதவீதமாக இருந்தது. இப்போது மணிநகரில் 23.5 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளது. மோடி பிரதமராகி டெல்லி சென்று விட்டதால் மக்களிடையே தேர்தல் ஆர்வம் குறைந்து விட்டதையே காட்டுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்