முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க்.கில் மோடி கூட்டத்துக்கான இருக்கைகள் நிரம்பியது

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், செப் 19 - பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை அவர் வெள்ளை மாளிகையில் 28,29ம் தேதிகளில் 2 நாட்கள் சந்தித்து பேசுவார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை அங்கு வாழும் இந்தியர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

மோடி பேசும் பிரம்மாண்ட கூட்டத்திற்கும் அவர்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். 28ம் தேதி நடைபெறவுள்ள அந்த கூட்டம் நியூயார்க் நகரில் மடிசன் சதுக்க தோட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்த சதுக்கத்தில் ஒரே நேரத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வரை அமர முடியும்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் அனைவரும் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சி அமைப்பாளர்கல் மூலம் பங்கேற்பாளர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. மொத்தமுள்ள 20 ஆயிரம் இருக்கைகளில் நேற்றுடன் 18 ஆயிரம் இருக்கைகள் நிரம்பின. இதையடுத்து பெயர் பதிவு நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 2 ஆயிரம் இடங்கள் கூட்ட அன்பளிப்பாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி பேச்சை கேட்க அங்கு வாழும் மேலும் சுமார் 50 ஆயிரம் இந்தியர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மோடி பேச்சை கேட்க டைம்ஸ் சதுக்கத்தில் மிகப்பிரம்மாண்டமான திரை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நியூயார்க், வாஷிங்டன் உட்பட பல முக்கிய நகரங்களில் உள்ள ஓட்டல்களில் திரை அமைத்து பிரதமர் மோடி பேச்சை நேரடியாக காட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்