முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளந்தா பல்கலைக் கழகத்தை தொடங்கி வைத்தார் சுஷ்மா

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

ராஜ்கிர், செப் 21 - பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்தியாவின் பழம் பெருமை வாய்ந்த நாளந்தா பல்கலைக் கழகத்தை வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முறைப்படி தொடங்கி வைத்தார்.

பண்டைய காலத்தில் கல்வியின் மூலம் உலக நாடுகளை இந்தியாவுடன் இணைக்குனம் பாலமாகவும், அடித்தளமாகவும் நாளந்தா பல்கலைக் கழகம் விளங்கியது. கி.பி. 427ம் ஆண்டு தொடங்கப்பட்டு 12ம் நூற்றாண்டு வரை செயல்பட்ட இந்த பல்கலைக் கழகத்துக்கு தற்போது மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுவது முற்றிலும் தவறு. ஏனென்றால் பாரம்பரியம் எப்போதும் அழிவதில்லை. நாளந்தா ஓர் பல்கலைக் கழகம் மட்டுமல்ல. பாரம்பரியமும் ஆகும். நாளந்தா பல்கலைக் கழகம் வரலாற்றில் ஆழமாக செதுக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் உலக அளவில் மாணவர்களை கவந்திழுக்கும் காந்தமாக இந்த பல்கலைக் கழகம் செயல்பட்டுள்ளது. அண்மையில் வங்கதேசத்துக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்குள்ள மாணவர்கள் நாளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயில ஆர்வமாக இருந்ததை காண முடிந்தது. இந்த பல்கலைக் கழகத்தில் 10 ஆண்டுகளில் உயர் ரக வளாகங்களை கட்டும் விதமாக மத்திய அரசு ரூ. 2,727 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். இந்த விழாவில் பீகார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி, சிங்கப்பூர் தூதர் லிம்துவான் குவான், தாய்லாந்து தூதர் சலித் மணிதியாகுர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், லாவோஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்