முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்டாசி முதல் சனிக்கிழமை: திருப்பதியில் திரண்ட பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable


திருப்பதி, செப் 22:
திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் வருகிற 26ம் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி லட்டு பிரசாதம் கிடைக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் முழுக்க மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புரட்டாசி  முதல் சனி்க்கிழமையன்று ஏழுமலையானை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். ரெயில், பஸ்களிலும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு வந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக பக்தர்கள் நடமாட்டம் குறைவாக இருந்த திருப்பதியில் அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் மீண்டும் களைகட்டியது. இதனால்  சாமி தரிசனம், லட்டு பிரசாதம் வாங்குவது, மொட்டை போட்டு தலைமுடி காணிக்கை வழங்குவது, தங்கும் அறைகள் வாங்குவது ஆகியவற்றுக்காக பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். நேற்றும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரமாகிறது. புரட்டாசி மாதம் என்பதால் வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்