முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் வேல் எடுக்கும் திருவிழா

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், அக் 18 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் எடுக்கும் திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடந்தோறும் புரட்டாசி கடைசி வெள்ளிக்கிழமையன்று மழை வேண்டியும், கிராம மக்கள் சார்பில் வேல் எடுக்கும் திருவிழா நடைபெறும். நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் கையில் உள்ள தங்கவேலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பல்லக்கில் எழுந்தருள செய்யப்பட்டது. அதன் பின்னர் சன்னதி தெரு, கீழரத வீதி, மேலரத வீதி வழியாக உலா வந்து மலைக்கு கொண்டு சென்றனர். மலையில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள காசி தீர்த்தம் எனும் சுனையில் வேலுக்கு பால், பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அங்குள்ள குமரன் கையில் வேல் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் கூட்டாஞ்சோறு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை 4 மணிக்கு மலையில் இருந்து மீண்டும் அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலுக்கு வேல் கொண்டு வரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்