முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரேபியாவின் மறைந்த மன்னரின் உறவினர்கள் பதவி பறிப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

ரியாத் - சவுதி அரேபியாவில் 90 வயதான மன்னர் அப்துல்லா கடந்த வாரம் உடல் நலக் குறைவினால் மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சல்மான் புதிய மன்னராகப் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து அப்துல்லாவின் மகன்கள் மற்றும் உறவினர்களின் பதவிகளை சல்மான் அதிரடியாக பறித்து உத்தரவிட்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா முக்கிய பங்கு வகிக்கிறது. சவுதி அரேபியாவில் நீண்ட கால மாக அப்துல்லா மன்னராக திகழ்ந்து வந்தார். கடந்த சில மாதங்களாக 90 வயதான மன்னர் அப்துல்லா உடல்நலக் கோளாறு காரணமாக ரியாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வாரம் மரணமடைந்தார்.
அவரைத் தொடர்ந்து, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் 79 வயதான சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் புதிய மன்னராகப் பொறுப்பேற்ரார்.

இதைத் தொடர்ந்து தனது புதிய உளவுத்துறை அதிகாரியை சல்மான் அறிவித்தார். அத்துடன், மன்னர் அப்துல்லாவின் மகன்கல் மற்றும் மருமகனின் பதவிகளை பறிக்கும் உத்தரவையும் வெளியிட்டார். மன்னர் அப்துல்லாவின் மகன் இளவரசர் காலித் பின் பந்தர் வகித்து வந்த உளவுத்துறை பொறுப்பு பறிக்கப்பட்டது. மெக்கா பிராந்திய கவர்னராக இருந்த இளவரசர் மிஷால், ரியாத் பிராந்திய கவர்னராக இருந்த இளவரசர் துர்க்கி ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன.

அத்துடன், அப்துல்லாவின் மருமகன் இளவரசர் பந்தர் பின் சுல்தானின் தேசிய பாதுகாப்பு துறை செயலாளர் மற்றும் மன்னரின் ஆலோசகர் பதவிகள் பறிக்கப்பட்டன. அப்துல்லாவின் மற்றொரு மகன் இளவரசர் மிதாப் வகித்து வந்த உள்ளூர் பாதுகாப்பு படை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செய்தி மற்றும் கலாசாரம், சமூகநலன், போலீஸ் மற்றும் தகவல் தொடர்பு துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் உட்பட 31 பேர் அமைச்சர்களின் பட்டியலையும் மன்னர் சல்மான் ரியாத்தில் வெளியிட்டார்.

சல்மானின் புதிய அமைச்சரவையில் அப்துல்லாவிடம் பணியாற்றிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் அலி அல்நவோமி, வெளியுறவு அமைச்சர் இளவரசர் சவுத் அல் பைசல் மற்றும் நிதியமைச்சர் இப்ராகிம் அல் ஆசாப் ஆKியோர் தங்கள் பதவிகளைத் தக்கவைத்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து