முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தல் வந்தால் தைரியமாக போட்டியிட முடியுமா?

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - ஒரு இடைத்தேர்தல் வந்தால் தைரியமாக போட்டியிட முடியுமா? இல்லை பொதுத்தேர்தலில்தான் தைரியமாக வேட்பாளர் லிஸ்ட் தயாரிக்க முடியுமா?என்று  தமிழக பிஜேபி தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார் நடிகை குஷ்பு, பிஜேபி பற்றி யாரோ எழுதி கொடுத்த வசனத்தை பேசினால் அது மக்கள் மத்தியில் எடுபடாது. அவர்கள் எள்ளி நகையாடுவார்கள் .இது குறித்து அவர் கூறியதாவது:–

தாம்பரத்தை தாண்டி தாமரையை தெரியாது என்று அவர் பேசி இருப்பதன் மூலம் அவருக்கு தாம்பரத்தை தாண்டி எதுவுமே தெரியாது. இவ்வளவு கிட்டப்பார்வை உள்ளவர் என்பது இப்போதுதான் தெரிகிறது. தாம்பரத்தை தாண்டியும் தாமரை வளர்ந்து இருக்கிறதா? எல்லைகளை கடந்தும் வளர்ந்து வருகிறதா? என்ற அரசியல் நிலவரங்களை அறிந்துக்கொண்டு பேசுவது தான் அவர் பெற்றுள்ள பதவிக்கு மரியாதை.கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை மலர்ந்துள்ளது. கன்னியாகுமரியில் ஒரு அமைச்சர் இருக்கிறார். நாகர்கோவில் நகர சபை எங்கள் கைவசம் உள்ளது.

மேட்டுப்பாளையம் எங்கள் வசம் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை... என்று வட இந்தியர்கள் பெருமையுடன் சொல்லும் அளவுக்கு எல்லா இடங்களிலும் கால் பதித்து இருக்கிறோம்.கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் திமுகவுக்கு இணையான வாக்குகளை பெற்றுள்ளோம். திமுக, அ.திமுகவுக்கு மாற்றாக பிஜேபிவளர்ந்து இருப்பதை, வளர்ந்து வருவதை மக்கள் கண்கூடாக பார்க்கிறார்கள். அந்த வயிற்றெரிச்சலில்தான் இப்படி பேசி இருப்பர் என்று கருதுகிறேன்.

இவை எதுவுமே தெரியாமல் நன்றி உணர்ச்சியை காட்டுவதற்கு வாய்க்கு வந்த வார்த்தையெல்லாம் பேசக்கூடாது. யாரோ எழுதி கொடுத்த வசனத்தை சினிமாவில் பேசலாம். இது அரசியல். இங்கும் எழுதி கொடுத்த வசனத்தை பேசினால் எடுபடாது. மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.எங்களை பற்றி விமர்சிக்கும் குஷ்புவால் திமுகவை விமர்சிக்க முடியாது. காரணம் இன்னும் பாசம் இழையோடுகிறது.

பிஜேபி விமர்சிப்பதற்கு முன்பு உங்கள் பலம் என்ன? எத்தனை லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? எத்தனை மாவட்ட தலைவர்கள் எந்தெந்த அணியில் இருக்கிறார்கள்? வாசன் போய் விட்டார். சிதம்பரம் இருப்பாரா? போவாரா? என்று தெரியவில்லை. இந்த கோஷ்டி அரசியலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதை சரிப்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். ஒரு இடைத்தேர்தல் வந்தால் தைரியமாக போட்டியிட முடியுமா? இல்லை பொதுத்தேர்தலில்தான் தைரியமாக வேட்பாளர் லிஸ்ட் தயாரிக்க முடியுமா? என்ற காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரங்களை எல்லாம் கவனியுங்கள்.சினிமா பிரபலமாக இருப்பதால் எதை வேண்டுமானாலும் எப்படியும் பேசலாம் என்று நினைத்து விடாதீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து