முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 தமிழர்கள் சுட்டுக்கொலை: ஆந்திர போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க பாராளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஆந்திர போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து பாராளுமன்ற மக்களவையில் அதிமுக எம்.பி. வேணுகோபால், இச்சம்பவத்தில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

முன்னதாக அவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து ஆந்திர துப்பாக்கிச் சூடு குறித்து விவாதிக்க அனுமதி கோரி அதிமுக மக்களவை குழு தலைவர் வேணுகோபால் நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால், இந்த பிரச்சினை மாநில அரசு சம்பந்தப்பட்டது எனக் கூறி ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்க  மறுத்துவிட்டார். அதேவேளையில் இந்த பிரச்சினை குறித்து அவையில் பேச அனுமதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அவையில் பேசிய அதிமுக எம்.பி.வேணுகோபால்,  ஆந்திர மாநிலம் சேஷாலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக அதிரடிப் படையினரால்  என்கவுன்ட்டரில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் மீது வெட்டுக் காயங்களும் உள்ளன. ஆந்திர துப்பாக்கிச் சூடு குறித்த உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். என்கவுன்ட்டரில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதி கிடைக்க மத்திய அரசு வழிவகை சென்றார் என்று வலியுறுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து