முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் இயல்புநிலை திரும்புகிறது

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புட்கம் மாவட்டத்தில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டதில் கடந்த இரு நாட்களாக காஷ்மீர் பகுதியில் போராட்டம் காணப்பட்டது. இந்த போராட்டத்தின்போது போலீசாருக்கும் அந்த பகுதி மக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.இதனால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது. பிரிவினைவாதத்தலைவர்களுக்கு இருந்த கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று கடைகள்,பள்ளிகள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் திறந்திருந்தன. காஷ்மீரில் போக்குவரத்தும் இயல்பான நிலையில் இருந்தன.


கடந்த வாரம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக் கையில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.மேலும் ஒரு இளைஞர் நர்பல் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்தார்.இந்த தாக்குதலைக்கண்டித்து கடந்த சனிக்கிழமையன்று பிரவினை வாதிகள்  கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.


இந்த நிலையில் பிரிவினைவாதத்தலைவர்கள் சையது அலி ஷா கிலானி மற்றும் மிர்வய்ஸ் உமர் பரூக் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதால் அந்ததலைவர்கள் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.காஷ்மீர் பகுதியில் இயல்பு நிலை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து