முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது மும்பை

புதன்கிழமை, 20 மே 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை: நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முந்தைய தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்குள் நேரடியாக நுழைந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

இறுதிப்போட்டிக்கான முந்தைய சுற்றின் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஐ.பி.எல். 2015 முதலில் களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் 51 பந்துகளில் 65 ரன்கள், படேல் 25 பந்துகளில் 35 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.
இறுதியாக விளையாடிய அதிரடி பொல்லார்டு 17 பந்துகளில் 41 ரன்கள் என சென்னை அணியின் பந்து வீச்சை விளாசினார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. சென்னை அணி வெல்ல 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

பின்னர் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித் மற்றும் ஹஸ்ஸி களமிறங்கினர். முதல் ஓவரின் 4வது பந்திலேயே ஸ்மித் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இருப்பினும் ஹஸ்ஸியும் டூபிளெசிஸ்ஸும் சற்று நிலைத்து நின்றனர். 5.1வது ஓவரில் ஹஸ்ஸி 16 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். ரெய்னா தம் பங்குக்கு 25 ரன்களை எடுத்தார். சென்னை அணியின் கேப்டன் டோணி முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி சொதப்பினார். டூபிளெசிஸ்தான் நிலைத்து அதிகபட்சமாக் 45 ரன்களை எடுத்தார்.

பின் வரிசை வீரர்களில் பிராவோ 20, ஜடேஜா 19, அஸ்வின் 24 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினர். சென்னை அணி 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது. இந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி கூறியதாவது:

ஸ்மித்துக்கு கொடுக்கப்பட்ட எல்பிடபல்யூ முடிவு மிகவும் கொடூரமானது. இதைய எங்களால் மறக்கமுடியாது. 180 ரன்களுக்கு மேலான இலக்கை எடுப்பது எப்போதுமே கடினமானது தான். எங்களது பேட்டிங்கில் அதிரடி இல்லை. மென்மையான ஆட்டமே வெளிப்பட்டது. ஆட்டத்தின் நடுபகுதி வேகத்தை இழந்துவிட்டோம். முதல் 6 ஓவரில் விக்கெட்களை கைப்பற்ற முடியாமல் போனது ஆனாலும், பந்துவீச்சு மோசமில்லை. 180 ரன் வரை இந்த ஆடுகளத்தில் எடுக்கலாம். பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தை ராஞ்சியில் ஆடுகிறோம். நாங்கல் அங்கு அதிகமாக ஆடியது கிடையாது. சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார். வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது: எங்களது தொடக்கம் சிற்பபாக இருந்தது. இதனால் மிகப்பெரிய ஸ்கோரை எட்டினோம். நாங்கள் தொடர்ந்து நேர்த்தியாக விளையாடி வருகிறோம். இறுதிப் போட்டியை கொல்கத்தாவில் ஆடுகிறோம். மும்பை மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவில் ஆடியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து