Idhayam Matrimony

பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2026      இந்தியா
mODI 2023-05-25

டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கிவைத்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியில் பேசுகையில், காங்கிரஸ் கட்சி, அசாமின் பல தலைமுறையினரை மாயக் கனவுகள் மூலம் ஏமாற்றி வந்தது. நீங்கள் காங்கிரஸை நாட்டிலிருந்து அசாமிலிருந்து அகற்றிவிட்டு, பா.ஜ.க.-என்.டி.ஏ. கூட்டணிக்கு வாய்ப்பளித்தீர்கள். காங்கிரஸ், தனது சுயநல அரசியலுக்காக பல்வேறு சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி வந்தநிலையில், பா.ஜ.க.தான் நீடித்த அமைதியை ஏற்படுத்த முயற்சித்தது.

காங்கிரஸ் என்பது பொய் வாக்குறுதிகளை விற்கும் ஒரு கடை. ஒவ்வொரு பொய் வாக்குறுதியுடனும் 4 பெரும் பொய்களையும் போனஸாக காங்கிரஸ் வழங்குகிறது. அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு எந்தக் காலத்திலும் சிறிதும் இல்லை. காங்கிரஸார் மற்றொரு கொடிய பாவத்தையும் செய்தனர். அதுவே நாட்டுக்கும் அசாமுக்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியது. வாழ்வாதாரம், பெண்கள், நிலம் ஆகிய 3 முக்கிய கூறுகளின் பாதுகாப்பையுமே காங்கிரஸ் கேள்விக்குறிக்கு உள்ளாக்கியது. அவர்கள் எப்போதும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவளித்து வந்தனர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து