Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2026      தமிழகம்      அரசியல்
CM-2-2026-03-13

சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.சென்னை அண்ணா அறிவாயலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க., தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அறிவித்து இருந்தார். இந்த 5 பேர் கொண்ட குழுவினர், தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போட்டி போட்டியிட உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மற்றும் முதல்வர்  மு.க.ஸ்டாலின் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து