எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாததால், நாடு முழுவதும் சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டரும் பல்வேறு பகுதிகளில் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகின்றது.
இதுதொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளனர். ஆனால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து உடனடியாக விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்த நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை தொடங்கிய 3 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் 12 மணியளவில் அவை தொடங்கியபோது, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காராணமாக, பிற்பகல் 2 மணிவரையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


