முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற முடக்கத்திற்குதீர்வு காண டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் சுமூகமாக தீர்வு கிட்டுமா?

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக3, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 10நாட்களாக எந்த வித நடவடிக் கைகளும் இல்லாமல் முடங்கி வருகிறது.இதனால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு(என்.டி.ஏ) கவலையடைந்துள்ளது. ஐ.பி.எல் போட்டியின் முன்னாள் தலைவர் லலித் மோடி,மத்திய பிரதேசம் தொழில் முறை தேர்வு வாரியம்(வியாபம்) முறைகேடு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கி வருகின்றன.இந்த கூட்டத்தொடரை சுமூக மாக நடத்த ஆளும் பாஜக தலைமையிலான கட்சி விரும்புகிறது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதியன்று துவங்கியது.

கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளிலேயே ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றன.

ஐ.பி.எல் எனப்படும் டி20கிரிக் கெட் போட்டி இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியின் முன்னாள் தலைவராக லலித் மோடி இருந்தார்.அவர் ஒருபோட்டித்தொடரின் போது அன்னிய செலாவணி விதிமுறையை மீறியதாக வழக்கு உள்ளது.

இந்த வழக்கின் காரணமாக லலித் மோடி தண்டிக்கப்படும் நிலை உள்ளது.இதனால் அவர் கடந்த 4ஆண்டுகளுக்கு மேல் லண்டனில் வசித்து வருகிறார். இந்தியாவிற்கு அவர்வந்தால் தண்டனை அளிக்கப்படும் என அவர் அங்கேயே இருக்கிறார்.

இந்த நிலையில் அவரது மனைவி புற்றுநோயால் அவதிப்பட்டு போர்ச்சுகல் நாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் தனது மனைவியை பார்க்க போர்ச்சுகல் செல்ல வேண்டி இருந்தது.

இந்த நிலையில் அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியை நாடினார். அவரும் லலித் மோடி பிரிட்டன் பயண ஆவணங்கள் பெறுவதற்கு உதவியதாக தகவல்கள் வெளியாகின.லலித் மோடிக்கு விசா கிடைப்பதில் ராஜஸ்தான் முதல்வரும் பாஜ மூத்த தலைவர்களில் ஒருவருமான வசுந்தரா ராஜே உதவியதாக செய்தி வெளியானது.மேலும் மத்திய பிரதேசம் மாநில அரசு பணிகளுக்கு தேர்வு நடத்தும்  தொழில் முறை தேர்வு வாரியத்திலும்(வியாபம்) முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.

ஊழல் முறைகேடுகளில் சிக்கியுள்ள பாஜக தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜ அரசு கொண்டு வரும் நில கையக மசோதா ஏழை விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளது.விவசாயிகளின் நலன்களை பாதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற விட மாட்டோம் என்று காங்கிரஸ் துணை தலைவர்ராகுல் காந்தி கூறியுள்ளார்.இதனால் கடந்த 10நாட்களாக பாராளுமன்றம் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.எந்த அலுவல்களுமே நடைபெறவில்லை.

இந்த நிலையில் பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பாஜ அரசு இன்று ஏற்பாடு செய்துள்ளது.இந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த கூட்டத்தில் தீர்வு ஏற்படுமா என்று எதிர் பார்ப்பு நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து