வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2016      திருச்சி
VDM

வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதியில் இன்று அதிகாலையிலிருந்து பரவலாக  மழை பெய்து வருகிறது வங்ககடலில் இலங்கை அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  காரணமாக வேதாரண்யம், தலைஞாயிறு கோடியக்கரை, கரியாப்பட்டினம், கருப்பம்புலம்,  தாணிக்கோட்டகம், வாய்மேடு, செம்போடை, கத்தரிப்புலம், ஆயக்காரன்புலம் போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது.
பருவமழை சரிவர பெயாமல் நிலத்தடி நீர்மட்டம் கூட குறைந்திருந்தது தற்போது பெய்யும்  மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர் இந்த மழை தொடர்ந்து பெய்தால் கால்நடைகளுக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
     வேதாரண்யம் கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன்  காணப்படுவதால் மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் உள்ளனர்.
    வங்ககடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி   காரணமாக கடல் சீற்றத்துடன் கொந்தளிப்பாகவும், ஆழ்கடல் பகுதியிலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது இதனால் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், போன்ற கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை  மீனவர்கள்; கடலுக்கு செல்லாததால் ஐநூறுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடற்கரையோரத்திலும் ஆற்றோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: