முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அய்யம்பாளையம் கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் தீக்குழி இறங்கும் விழா

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      திருச்சி
Image Unavailable

மண்ணச்சநல்லூர் : திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சா.அய்யம்பாளையம் கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் தீக்குழி இறங்கி சபரிமலை யாத்திரை சென்றனர். ஐயப்ப பக்தர்கள் வருடந்தோறும் கார்த்திகை முதல் தேதி மாலையிட்டு விரதமிருந்து இரு முடி கட்டி தீ மிதித்து சபரிமலை செல்வது வழக்கம். அதன்படி 22வது ஆண்டாக இந்த ஆண்டு தீ மிதி சபரி மலை யாத்திரை நடைபெற்றது. இதற்காக அய்யம்பாளையம் கீழுர் மாரியம்மன் கோவில் முன்பாக தீ குண்டம் அமைக்கப்பட்டது. மாலை அணிந்த பக்தர்கள் அருகில் உள்ள ஒரு கோவிலில் அபிசேகம் செய்து பக்தர்கள் மேள தாளத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். மாரியம்மன் கோவில் முன்பாக அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் வரிசையாக அய்யப்ப சரணகோசம் முழங்க தீ குழி இறங்கினர். பின்னர் மாரியம்மன், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை குருசாமி தர்மலிங்கம் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்