கோபிசெட்டிபாளையம் சாரதா கலை அறிவியல் கல்லூரில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      கோவை
கிறிஸ்துமஸ்

 

கோபிசெட்டிபாளையம் சாரதா கலை அறிவியல் கல்லூரில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

 

இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் தினம், சாரதா கலை அறிவியல் கல்லூரியில் 21.12.2016 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர்.ஜி.எஸ்.கலா வரவேற்புரை வழங்கினார். சிஸ்டர். மேரி எலிசபெத் எம்.ஏ.இ பி.எட்.இ முதல்வர் செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி அவினாசி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளிடையே அன்பு, இறைவழிபாடு, மனிதநேயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சிறுகதைகளின் மூலம் எடுத்துரைத்தார். இயேசுபிரான் பிறப்பு குறித்த மாணவிகளின் குறுநாடகம் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் இனிப்புகளுடன் விழா நடைபெற்றது. கல்லூரி நிர்வாகத்தின் தலைமையில் விழா இனிதே நிறைவுபெற்றது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: