முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்தா புயலால் சேதமடைந்த விவசாயிகளுக்கு இலவச விதை, உரங்கள் வழங்க வேண்டும், இயற்க்கை வேளாண் விழிப்புணர்வு சங்க கூட்டத்தில் தீர்மானம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் இயற்கை வேளாண் விழிப்புணர்வு சங்கம் சார்பில் செயற்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்க தலைவர் சோழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் மு.பரசுராமன், மாயகிருஷ்ணன், மனோகரன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் அண்மையில் காலமான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மறைவிற்கு இறங்கள் தெரிவித்து அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நடந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் வர்தா கோரத்தாண்டவத்தில் சிக்கி சின்னாபின்னமானது. இதேப் போல் உத்தரமேரூர் மற்றும் மதுராந்தகம் அடுத்த தீட்டாளம், கடம்பூர், கம்மாளம்பூண்டி, காவனூர் புதுச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் வர்தா புயல் தாக்கத்தினால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. அம்மையப்பநல்லூர், நங்கையர்குளம், அழிசூர், திருப்புலிவனம் உள்ளிட்ட இடங்களில் பயிரிட்டிருந்த வாழைமரங்களும், பப்பாளி மரங்களும் முற்றிலும் சேதமடைந்தன. சாலவாக்கம், வெங்கச்சேரி, ஆதவப்பாக்கம், வயலக்காவூர் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த கீரை. தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், தர்பூசணி உள்ளிட்ட காய்கறி வகைகளும் தண்ணீரில் மூழ்கி சேதமானது. இவ்வாறு பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும், சேதமடைந்த பயிர் மற்றும் காய்கறிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும், புயலில் பாதிப்படைந்த விவாசயிகளுக்கு விதைகள் உரங்களை இலவசமாக வழங்க வேண்டும், காஞ்சிபுரம் சுற்றியுள்ள பாலாறு, செய்யாறு, வேகவதியாறு உள்ளிட்ட ஆறுகளில் இடையே தடுப்பணை கட்டத்தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago