எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த நாள் 29-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாகும். பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் ஆகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆண்டு இந்த பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் 2026– 27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் அன்றைய தினம் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி தொடங்கும் என்றும், மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் இறுதி செய்யப்பட்ட தற்காலிக அட்டவணையை மேற்கோள் காட்டி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த நாள் 29-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாகும். பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் ஆகிறது.
ஜனாதிபதி உரை மற்றும் மத்திய பட்ஜெட் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 13 -ம் தேதி பிறகு ஒரு மாத கால விடுமுறைக்கு ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து பாராளுமன்றம் மார்ச் 9 அன்று மீண்டும் கூடி ஏப்ரல் 2-ம் தேதி இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


