எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 (நேற்று) அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில், மனுவிசாரணை நேற்று 3.30க்கு தொடங்கியது. அப்போது, சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் எனக்கூறி படத்திற்கு ய/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்து விசாரணையை ஜன.21க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், மத்திய தணிக்கை வாரியத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள் என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு மத்திய தணிக்கைச் சான்றிதழ் வாரியம் தணிக்கைச் சான்றிதழ் வழங்காததால், பொங்கல் வெளியீட்டிலிருந்து ஜன நாயகன் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தணிக்கைச் சான்றிதழ் வாரியம் மேல் முறையீடும் செய்துள்ளது.
இதனிடையே, சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கும் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது. பராசக்தி இன்று (ஜன. 10) வெளியாகவுள்ள நிலையில், கடைசி தருணமாக இன்றுதான் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


