முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் வெளிநாட்டு பக்தர்கள் கிரிவலம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலையில் நேற்று 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மலையே சிவனாக, சிவனே மலையாகவும் கருதுவதால் ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் 5 லட்சத்திற்கும் மேற்படட பக்தர்கள் கிரிவலம் வந்து அஷ்டலிங்கங்களையும் வழிபட்டு அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை வழிபட்டு செல்கினற்னர். இந்நிலையில் கார்த்திகை மகாதீபத்திருவிழா கடந்த 12ந் தேதி அண்ணாமலையார் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபத்தைக்காண உள்ளூர் வெளியூர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதுமட்டுமின்றி தினந்தோறும் திருவண்ணாமலைக்கு அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம செய்துவிட்டு மலையில் மகாதீப தரிசனத்தையும் பார்த்துவிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் மலேசியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று மகாதீபம் நிறைவடைந்ததையட்டி 100க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் 14 கி.மீ. தூரமுள்ள மலையை கிரிவலம் வந்து அஷ்டலிங்கங்களையும் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago