நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாயில் கருவேல மரங்கள் அகற்றம் பணி : தாசில்தார் காளிமுத்து நேரில் ஆய்வு!

சனிக்கிழமை, 24 டிசம்பர் 2016      திண்டுக்கல்
Batlagundu tree removal 2016 12 24

வத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாயில் கருவேலம் மரம், சீமைக்கருவேலம் மரங்கள் அகற்றும் பணியை நிலக்கோட்டையில் 150 ஏக்கர் பரப்பளவு உள்ள கண்மாயில் கருவேல மரங்கள் அகற்றம் எம்.பி உதயகுமார் தலைமையில் கலெக்டர் வினய் துவக்கி வைத்து தற்போது நடைபெற்று வருகிறது.

நிலக்கோட்டை நகரின் அருகில் கொங்கர்குளம் கண்மாயானது  150 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த கண்மாயில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேலம் மற்றும் சீமைக்கருவேலம் மரங்கள் அகற்றுவதற்காக நிலக்கோட்டை நற்துணை அறக்கட்டளை சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த கலெக்டர் வினய் பொதுப்பணித்துறை அனுமதி கேட்டறிந்து மருதாநதி வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் சேகர் உதவி செயற்பொறியாளர் சௌந்தர் இளநிலை பொறியாளர் தங்கவேல் ஆகியோர் ஆய்வு செய்து இந்த கருவேலம் மரங்கள் அகற்றுவதற்கான விதிமுறைகளை கலெக்டரிடம் சமர்ப்பித்தனர். அதன் பின்பு 9 நிபந்தனைகளுடன் 150 ஏக்கர் பரப்பளவு உள்ள கொங்கர்குளம் கண்மாயில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேலம் மற்றும் சீமைக்கருவேலம் மரங்களை அகற்றுவதற்கு நற்துணை அறக்கட்டளைக்கு அனுமதி கொடுத்தார். முதன் முதலாக கொங்கர்குளம் கண்மாயில் கருவேலம் மற்றும் சீமைக்கருவேலம் மரங்கள் அகற்றுவதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியினை சிறப்பாக நடைபெறுகிறதா என்று நிலக்கோட்டை தாசில்தார் காளிமுத்து மற்றும் மருதாநதி வடிநிளக்கோட்ட இளநிலை பொறியாளர் தங்கவேல் மற்றும் அதிகாரிகளும் பணியினை ஆய்வு செய்தார்கள். இப்பணியினை செய்து வரும் நற்துணை அறக்கட்டனை நிர்வாக இயக்குநர் ஜோதிமுருகன் உடனிருந்தார். ஆய்வு செய்த உடன் ஜோதிமுருகன் கூறும் போது இப்பணியினை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: