ஈரோடு கொங்கு கல்லூரியில்மாநில அறிவியல் முகாம் தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      ஈரோடு

 

அறிவியல் கண்டுபிடிப்பில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் ஆராய்ச்சி குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 

அதன்படி, இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. 5 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியின் தொடக்க விழாவுக்கு கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளைத் தலைவர் பரமேஷ்வரி லிங்கமூர்த்தி தலைமை வகித்தார்.

 

அறக்கட்டளைப் பொருளாளர் ஈ.ஆர்.கே.கிருஷ்ணன், கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.வித்யா வரவேற்றார்.

 

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயிற்சி புத்தகத்தை வெளியிட்டுப் பேசினார்.

156 மாணவ, மாணவிகள்

விழாவில், கல்லூரி முதல்வர் ராமன், கொங்கு இன்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் எஸ்.குப்புசாமி, கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் கலைசெல்வி, அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் வி.கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

 

முகாமில் ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 16 பள்ளிகளில் இருந்து பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் 156 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். இதில், விஞ்ஞானிகள் கே.கே.சர்மா, ஆர்.ராமராஜ் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இதேபோல, டிசம்பர் 30-ஆம் தேதி வரை விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்: