முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலை அளவிலான தடகளப் போட்டி கொங்கு கலைக் கல்லூரி சாம்பியன்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      ஈரோடு

பாரதியார் பல்கலைக்கழக அளவிலான மகளிர் தடகளப் போட்டியில் கொங்கு கலை, அறிவியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

  பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றன. இதில், 68 கல்லூரிகளைச் சேர்ந்த 1,200 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், 57 புள்ளிகள் பெற்ற கொங்கு கலை அறிவியல் கல்லூரி வீராங்கனைகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

  800 மீ ஓட்டத்தில் எம்.சந்தியா, 200 மீ, 400 மீ ஓட்டத்தில் ஆர்.வித்யா ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர். 400 மீ தொடர் ஓட்டத்தில் எம்.சந்தியா, ஆர்.வித்யா, எம்.பவித்ரா, ஈ.செளந்தர்யா ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர்.

  அதேபோல, 100 மீ ஓட்டத்தில் ஆர்.நித்யா, 400 மீ தடைதாண்டும் ஓட்டத்தில் என்.பவித்ரா, 1,500 மீ ஓட்டத்தில் எம்.சந்தியா, 100 மீ தொடர் ஓட்டத்தில் எம்.சந்தியா, ஆர்.வித்யா, என்.பவித்ரா, ஆர்.நித்யா ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர்.

  100 மீ தடைதாண்டும் ஓட்டத்தில் ஆர்.நித்யா, ஈட்டி எறிதலில் எம்.வளர்மதி ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும், 800 மீ ஓட்டத்தில் ஈ.கெளசல்யா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

  சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைகளை கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் என்.ராமன், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சங்கர் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்