கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் , ரூ.13 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் .கோவிந்தராஜ்வழங்கினார்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      கரூர்
pro karur

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ்,, தலைமையில் நேற்று (02.01.2017) நடைபெற்றது.

 

வீட்டுமனை பட்டா

 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 221 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் தாட்கோ துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு தொழில் துவங்குவதற்கு ரூ.6,48,700 மதிப்பிலான மானியத்தொகையினையும், தோட்டக்கலைத்துறை சார்பாக தனபாக்கியம் என்ற பயனாளிக்கு பசுமைக்குடில் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4,67,500 மதிப்பிலான பின்னேற்பு மானியத்தொகையினையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 9 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.4,500 வீதம் ரூ.40,500 மதிப்பிலான காதொலி கருவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக 3 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.1,50,000 மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப்பட்டாக்களையும் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.13,06,700 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகா~;, வேளாண் இணை இயக்குநர் அல்தாப், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் ஜான்சிராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், தாட்கோ மேலாளர் முத்துசெல்வி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: