முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள செய்திகள்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      மாணவர் பூமி
Image Unavailable

ஒரு ஆசிரியரை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் போகும். அதனாலேயே அவர் நடத்துவதை கவனிக்காமல், முழு மனதோடு படிக்காமல், அவர் மேலுள்ள வெறுப்பை பாடத்தில் காட்டினாலும் அந்த பாடத்தில் வீக் ஆவது நிச்சயம். மனவெறுப்பை மாற்றுவது தான் வளர்ச்சிக்கு வழி! ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஏன் வீக்காக இருக்கிறோம் என்பதற்கான காரணங்களை நீங்களே அலசி ஆராய்ந்து பிரச்னையைத் தீர்க்க வழி தேட வேண்டும்.

இயற்பியலில் வரும் கனக்குகளும், பார்முலாவும் பிடிக்கவில்லை. புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் உடனே அதை வெறுப்பது தவறு. அந்தக் கணக்கைஒன்றுக்கு இரண்டு முறை உட்கார்ந்து போட்டுப் பார்த்தால் இயற்பியலில் நீங்கள்தான் கிங்!

வரலாறு பாடங்களில் வரும் Buy Doxycycline சம்பவங்களையும் வருடங்களையும் நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாயிருக்கிறது என்றால் அந்தப் பெயர்களையும் வருடங்களையும் கலர் ஸ்கெட்ச்சில் எழுதி அடிக்கடி கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். நீங்களே ஒரு வரலாறு ஆவீர்கள்!

புவியியல் பாடங்களில் வரும் இடம் நாடு, அமைப்பு போன்றவற்றை ஒருவர் இன்னொருவரிடம் மாற்றி மாற்றி விளையாட்டாகச் சொல்லிப் பார்க்கலாம். சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள உங்கள் தோழியின் பெயரை அதனுடன் தொடர்புபடுத்தி வைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும்.

கணக்குப் பாடத்தில் ஒரு சேப்டர் முடிந்ததும் அதில் வரும் பார்முலாக்களை நோட்டின் கடைசி பக்கத்தில் எழுதி வைத்துக் கொண்டால், இந்த சேப்டரில் இத்தனை பார்முலா என்ற தெளிவு இருக்கும். சும்மா ரிலாக்ஸாக இருக்கும்போது, அந்தப பக்கத்தை அடிக்கடித் திருப்பிப் பாருங்கள். கணக்கும் எளிதாக இருக்கும்.

இங்கிலீஷ் கிராமர் தகறாறு என்றால் பன்னிரண்டு Tense களையும் எழுதி, அதற்குக் கீழே உதாரணங்களையும் எழுதி வைத்து விடுங்கள்… உயிரியல் பாடங்களில் வரும் படங்களை ஒருமுறைக்கு இருமுறை வரைந்து பாகங்களை குறித்து விடுங்கள். பரீட்சையில் அதற்கான பலன் கிடைக்கும்…நிறைய மதிப்பெண்களாக. பொருளாதாரப் பாடங்களை ஒரு சினிமா கதைபோல் மனதுக்குள் ஓட்டுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களோடு சம்பந்தப்படுத்துங்கள். அக்கவுண்ட்ஸ் கணக்கை நீங்களே ஒரு உதராணத்தை உருவாக்கி மனதுக்குள் திரும்பத் திரும்ப எழுதிப் பாருங்கள். சி.ஏ படிப்புக்கு உத்தரவாதம் ரெடி.

பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட நிலையில் மாணவர்கள் கண்ணும் கருத்துமாக படித்துக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு படுத்துக்கொண்டே படிக்கும் பழக்கம் இருக்கும். சாப்பிட, குளிக்க, உறங்க என நம் உடல் ஒவ்வொரு செயலையும் அதற்கேற்ற நிலைகளில் செய்கிறது. உறங்கும் நிலையில் நாம் படித்தால் விரைவில் நம் உடல் உறக்கத்திற்கு தயாராகிவிடும். எனவே நீண்ட நேரம் படிக்க வேண்டும் என்றால் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள்……

குனிந்து வளைந்து உட்காரும் போது நம் நுரையீரல் சுருங்குவதால் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவும் அதன் மூலம் நம் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையும். இதனால் படிக்க உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே கொட்டாவி விட ஆரம்பித்துவிடுவோம். பிறகு நமக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று முடிவுக்கும் வந்துவிடுவோம். கொட்டாவி ஆக்ஸிஜன் குறைபாடுதானே தவிர ஆர்வக் குறைபாடு இல்லை.

எனவே நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள். சுவாசமும் சீராக இருக்கும். சோர்வும் சட்டென்று ஏற்படாது. பொழுதுபோக்கு அம்சங்கள் வீடுதோறும் பெருகிய பிறகு மாணவர்களிடம் சத்தமிட்டு படிக்கும் வழக்கம் குறைந்துவிட்டது. இது ஏன், வீட்டில் படிப்பதே குறைந்துவிட்டது. பெரும்பாலும் டியூசன் தான். டியூசனுக்கு போகும் மாணவர்கள் அங்கேயாவது சத்தமாக படிக்கிறார்களா? இல்லை……நீ மட்டும் படிச்சா போதுமா மத்தப் பசங்க படிக்க வேண்டாமா? என்று அதட்டலுக்குப் பயந்து மாணவன் சத்தமிட்டு படிப்பதே கேவலம் என்ற மனப்போக்கு தற்போது வளர்ந்து வருவது வேதனைக்குறியது.

தற்போது பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடம் தமிழ் செய்தித்தாள் கொடுத்து, அதை சத்தமாக படிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். கண்டிப்பாக ஒரு பத்தி படிக்கும் முன், அவனுக்கு ஏற்படும் குரல் நடுக்கம், சொற்களில் ஏற்ற இறக்கம், வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது போன்ற பல்வேறு தவறுகளை நாம் கவனிக்கலாம். சத்தமாக படிக்கச் சொல்வது எதற்கு தெரியுமா? மொழி அறிவு, பேசும் திறமை, பேச்சு வளம், மொழியை உச்சரிக்கும் தன்மை இவற்றை புரிந்து கொள்ளத்தான்.

மாணவர்கள் படிக்கும் போது வாய்விட்டுப் படியுங்கள், மனதுக்குள் படிக்கும் போது மனப்பாட அறிவு வேண்டுமானால் வளரலாம், வாய்விட்டுப் படிக்கும் போது மட்டுமே மொழிவளம், மொழித்திறமை வெளிப்படும். தமிழ் படிக்கும் போது வார்த்தைகளின் உச்சரிப்பு, அர்த்தம் கண்டிப்பாக மாறுபடும். சத்தமாக நீங்கள் படிக்கும் போது உள்களது மொழி அச்சம், பயம் தானாகவே விலகிவிடும்.

நீங்கள் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போது உங்களது உச்சரிப்புத் திறமை உங்களுக்கு பதவியை தானாகவே ஈட்டித்தரும். உங்கள் அச்சத்தைப் போக்கும், தன்னம்பிக்கையை வளர்க்கும் வாய்விட்டுப் படிக்கும் பழக்கத்தை இனியாவது ஊக்கப்படுத்தலாமே!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago