ஊட்டி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பொ.சங்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      நீலகிரி
2ooty-3

ஊட்டியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

                                      மக்கள் குறை தீர் கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடனுதவி,முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 83 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தவிட்டார். அதன்பின்னர் கடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் அறிவுறுத்தினார்.

                               நலத்திட்ட உதவிகள்

இக்கூட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரீ டாராக்டர் _2, ரோட்டரி டில்லர்_2, உலோக கலப்பை_2 என ரூ.10 லட்சம் அரசு மானியத்துடன் ரூ.25 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளையும், நீலகிரி ஆதிவாசிகள் சங்கத்தின் சார்பில் தையற்பயிற்சி முடித்த 48 நபர்களுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.

இந்நிக்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், தனித்துணை கலெக்டர்(மனுக்கள்) பரமசிவம், உதவி ஆணையர்(கலால்) முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) பாஸ்கரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பொன்ராமர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: