கரூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      கரூர்
pro kaur

கரூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தென்னிலை, பெஞ்சமாங்கூடலூர், விஸ்வநாதபுரி, தளுஞ்சி, கானியாளம்பட்டி, வெள்ளியனை சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் அரசு உத்தரவிற்கிணங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநர் காகர்லாஉஷா மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், ஆகியோர் அலுவலர்களுடன் நேற்று(7.1.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது அரவக்குறிச்சி தாலுக்கா, பரமத்தி ஒன்றியம் தென்னிலை பகுதியில் சோளம், கொள்ளு மற்றும் வெங்காயம் போன்றவை விவசாயம் செய்யப்பட்டு வறட்சியால் காய்ந்த நிலையில் உள்ள பயிர்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த சோளம் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்ததையும், விஸ்வநாதபுரியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மஞ்சள் விளைநிலங்களையும், குளித்தலை வட்டம், தோகமலை ஒன்றிய தளுஞ்சி கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர் பரப்புகளையும், கடவூர் வட்டம், கானியாளம்பட்டி கிராமத்தில் பயிரிடப்பட்டு பாதிக்கப்பட்டிருந்த மரவல்லிகிழங்கு சாகுபடி பரப்பளவையும், வெள்ளியனை பகுதியில் பாதிக்கப்பட்ட வேர்க்கடலை சாகுபடி பரப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது :

தமிழகத்தில் பெய்யும் சராசரி மழையில் நடப்பாண்டில் 30 சதவீதம் மழை பெய்து கடும் வறட்சியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறிட பணித்ததன் அடிப்படையில் இன்று தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் குறித்தும், குடிநீர் தட்டுப்பாடுகள் குறித்தும் ஆய்வின் அடிப்படையிலான கருத்துருக்கள் உடனடியாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கீதா (கிருஷ்ணராயபுரம்), ராமர் (குளித்தலை), மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அல்தாப்,கோட்டாட்சியர்கள் பாலசுப்ரமணியன் (கரூர்), சக்திவேல் (குளித்தலை), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், கால்நடைத்துறை இணை இயக்குநர் பழனிவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயந்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கலா, வட்டாட்சியர்கள் துரைசாமி (கரூர்),சக்திவேல் (குளித்தலை), துரைமுருகன் (அரவக்குறிச்சி) உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: