எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் 2016-17-ம் நிதியாண்டில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2240 பயனாளிகளுக்கு ரூ.1,88,72,000- மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 4127 பயனாளிகளுக்கு ரூ.5,14,47,500- மதிப்பிலான இயற்கை இறப்பு நிவாரணத்தொகையும் என 6367 பயனாளிகளுக்கு ரூ.7,03,19,500- மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. இதேபோல் 2016-17-ம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறை மூலம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 24675 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.8,82,25,440- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் கோட்டங்களுக்குட்பட்ட 2126 பயனாளிகளுக்கு ரூ.2,43,41,500- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகையை வழங்கினார்.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில் கடலூர் கலெக்டர் பொதுமக்கள் குறைதீர் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடலூர் கோட்டத்திற்கு உட்பட்ட 1003 பயனாளிகளுக்கு ரூ.1,13,91,000- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகைகளையும், விருத்தாச்சலம் கோட்டத்திற்கு உட்பட்ட 807 பயனாளிகளுக்கு ரூ.95,19,500- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகைகளையும் என ஆகமொத்தம் 1810 பயனாளிகளுக்கு ரூ.2,09,10,500- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகைகளையும் வழங்கினார். மேலும், தொழில்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை மூலம் 20 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.71,500- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.12,000- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.47,500- மதிப்பிலான இலவச சலவைப்பெட்டிகளையும் வழங்கினார். ஆகமொத்தம் 1863 பயனாளிகளுக்கு ரூ.2,10,41,500- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தொழில்துறை அமைச்சர் கலெக்டர் முன்னிலையில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிதம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட 126 பயனாளிகளுக்கு ரூ.11,46,000- மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 190 பயனாளிகளுக்கு ரூ.23,75,000- மதிப்பிலான இயற்கை இறப்பு நிவாரணத் தொகைகளையும் வழங்கினார். மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.24,000- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 25 பயனாளிகளுக்கு ரூ.1,14,000- மதிப்பிலான விலையில்லா சலவைப்பெட்டிகளையும் என ஆகமொத்தம் 347 பயனாளிகளுக்கு ரூ.36,59,000- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆகமொத்தம் தொழில்துறை அமைச்சர் இன்று 2210 பயனாளிகளுக்கு ரூ.2,47,00,500- (ரூபாய் இரண்டு கோடியே நாற்பத்து ஏழு லட்சத்து ஐநூறு மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிதம்பரத்தில் நடைபெற்ற விழாவில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் தலைமையுரையின்போது தெரிவித்ததாவது,
தமிழக அரசு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப் புறங்களில் வாழும் மக்கள், ஏழை எளிய மக்கள், பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினார் போன்றோர்களுக்கு தமிழகத்தில் மட்டும்தான் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வருவாய்த்துறை மூலம் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி வழங்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டமாகும். இன்று தொழில்துறை அமைச்சர் அவர்களால் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசால் பொங்கல் பரிசு தொகுப்பும், இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப்;பெற்று பொங்கல் திருநாளை நீங்கள் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற விழாக்களில் தொழில்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெரிவித்ததாவது,
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா தொடங்கிய உழவர் பாதுகாப்புத்திட்டம் 14 அம்சங்களை உள்ளடக்கிய திட்டமாகும். ஆண், பெண்ணுக்கு திருமண உதவித்தொகை, இயற்கையாக மரணமடைந்தால் ரூ.10000- ஈமச்சடங்கு செலவு செய்ய ரூ.2500-, முதியோர் ஓய்வூதியம், காசநோய், தொற்றுநோய், விபத்தின் மூலம் இறப்பு, இரண்டு கைகள் மற்றும் கால்கள் இழப்பு போன்றவற்றிற்கு நிவாரணத்தொகை வழங்கும் பல்வேறு அம்சங்களை கொண்ட உன்னதமான திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் இன்றைய தினம் கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் கோட்டத்திற்கு உட்பட்ட 2126 பயனாளிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2,43,41,500- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை, இயற்கை இறப்பு நிவாரணத்தொகை வழங்கப்படுகின்றது. நமது மாவட்டத்தை பொறுத்தவரை முதியோர் உதவித்தொகை ரூ.132 கோடி திட்ட மதிப்பீட்டில் நமது மாவட்டத்தில் அனைத்து முதியோர்களுக்கும் வழங்கப்படுகின்றது. முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உழவர் பெருங்குடி மக்களின் நலனை காக்கும் வகையில் தமிழ்நாடு மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துள்ளது. வறட்சியால் பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உதவி இல்லாமல் வறட்சி நிவாரணங்களுக்கு முதற்கட்டமாக நிவாணரங்களை அறிவித்துள்ள அரசு இந்த அரசு என்பதை பெருமையோடு செல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களால் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமாகும். கிட்டதட்ட 14 ஆண்டுகளாக பதினொராம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு முடித்தபிறகு மாணவ மாணவிகளுக்கு கல்வி தடைபடாமல் இருக்கவும், உந்து சக்தியாக திகழும் வகையிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழக அளவில் ரூ.240 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 லட்சத்திற்கு மேற்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொராம் வகுப்பு படிக்கும் 24675 மாணவ மாணவிகளுக்கு ரூ.8.82 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. இன்றைய தினம் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.15,86,04,440- உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு அம்சங்களுக்கு வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பும், விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைகள் பெறும் பயனாளிகள் அனைவரும் பொருப்பாக இந்த பணத்தை பெற்றுக்கொண்டு உபயோகமான காரணத்திற்கு நீங்கள் செலவிட வேண்டும் என்ற அன்பான வேண்டுகோலினை வைத்துக்கொள்கின்றேன். இந்த உதவித்தொகைகளை பெற்று நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டும் என வாழ்த்தி; பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், கலைமணி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, கடலூர் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பி.ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, வட்டாட்சியர்கள், முன்னாள் நகர் மன்றத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2026சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ.
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
இந்தியா, ஜப்பான், கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சிறப்புமிக்கது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
12 Feb 2026நியூயார்க், இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.462.58 கோடி..! பார்லி.யில் மத்திய அரசு தகவல்
12 Feb 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ர
-
இன்றைய நாள் எப்படி?
12 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Feb 2026- இராமேஸ்வரம் சுவாமி , அம்பாள் தங்க விருசப சேவை.
- ஶ்ரீசைலம், வேதாரண்யம், திருவைக்காவூர் கோவில்களில் சிவபெருமான் பவனி.
- திருமயம் ஆண்டாள் முத்துக்குறி கண்டயருளல்.


