ஊட்டியருகேயுள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.

சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை சார்பில் விவேகானந்தரின் 155_வது ஆண்டுவிழா தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார் தலைமை தாங்கினார். அறக்கட்டளை துணைத்தலைவர் சுந்தரதேவன், விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து பேசும்போது, விவேகானந்தரின் போதனைகளை கேட்டறிந்து மாணவர்கள் அதனை பின்பற்றி நடக்க முன்வரவேண்டும். வருங்கால இந்திய மாணவர்கள் கையில் தான் உள்ளது. எனவே மாணவர்கள் அதற்காக தங்களை தயார்படுத்தி தேசிய நலனுக்காக உழைக்க வேண்டும் என்றார்.

மாதா, பிதா, குரு, தெய்வம் குறித்து அறக்கட்டளை பொது செயலாளர் ஈஸ்வரன் பேசினார்.

விழாவினையொட்டி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் உதவி தலைமை ஆசிரியர் மார்சியஸ், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: