விவசாய கிணறுகளில் மோட்டார் திருடிய கும்பலில், மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டான். மொடக்குறிச்சி சுற்று வட்டாரத்தில், கடந்த இரண்டு மாதங்களாக, விவசாய கிணறு மோட்டார்கள், கம்பரஸர்கள் மாயமாகி வந்தன. மொடக்குறிச்சி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் கணபதிபாளையத்தை சேர்ந்த வடிவேல், மானூர் பகுதியில் மோட்டார் திருடும்போது, மக்களிடம் கையும் களவுமாக சிக்கினான். போலீசார் அவனை கைது செய்தனர். இதுதொடர்பாக பாசூர், வேங்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார், 32, என்பவனை போலீசார் கைது செய்தனர். மோட்டார் திருடும் கும்பல் தலைவனான, பாசூர், அருகேயுள்ள பச்சாம்பாளையத்தை சேர்ந்த அருண்குமாரை தேடி வருகின்றனர்.
- குன்றக்குடி வெள்ளி ரதம்.
- ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி.
- திருவிடைமருதூர் சிவபெருமான் குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்கப்பல்லக்கு. இரவு சுவாமி அம்பாள் ரிஷப சேவை தெப்பம்.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் திருவீதி உலா.
- திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்.