முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீட்டாவை தடை செய்யக்கோரி போராட்டம்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -, தமிழகத்தில் பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரி திண்டுக்கல்லில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மத்தியில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் _ திருச்சி சாலையில் உள்ள கல்லறை தோட்டம் முன்பு நேற்றுமுன்தினம் மாலை ஒன்றுகூடிய மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டம் நடத்தினர். இரவு முழுவதும் நடந்த இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பங்கேற்றனர். போராட்டம் நடத்தியவர்களுடன் மாவட்ட எஸ்.பி. சரவணன் கேட்டுக் கொண்டும் அவர்கள் கேட்கவில்லை. இதனையடுத்து 2வது நாளாக நேற்று திண்டுக்கல் நகரைச் சேர்ந்த பி.எஸ்.என்.ஏ. கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள், எஸ்.எஸ்.எம்., ஏ.பி.சி. பாலிடெக்னிக், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரும் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 8 கி.மீ. தூரம் நடந்து திண்டுக்கல்லில் போராட்டம் நடந்த கல்லறை மேட்டிற்கு வந்தடைந்தனர். அவர்களுடன்

மேலும் சில தன்னார்வ அமைப்பினர், பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஒன்று கூடியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. நேற்று இரவு வரை மாணவர்கள் போராட்டம் நீடித்தது. கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இன்று 19ம் தேதி மாணவர்கள் சார்பில் போராட்டம் மற்றும் பந்த் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் குடிநீர் மற்றும் உணவுப்பொட்

டலங்ககளை வழங்கி வருகின்றனர். திண்டுக்கல் அருகே நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்திற்கான சூட்டிங் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதையடுத்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே விஜய் சேதுபதி வந்தார். அவர் அங்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மத்தியில் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் நேற்று அவர் தனது படப்பிடிப்பை நிறுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்று கூடி போராட்டங்கள் நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago