முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக்- கைப் ஆதரவு

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், அஷ்வின், கைப் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும், அலங்காநல்லூர் போராட்டக்காரர்கள் மீது நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் இளைஞர் படை கிளர்த்தெழுந்துள்ளது. கமல், ரஜினி, விஜய், சூர்யா உட்பட முன்னணி தமிழ் நடிகர்கள் இந்த போராட்டத்திற்கு துணிச்சலாக ஆதரவை தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தனது சிக்சர் பாணி டுவிட் ஒன்றில். சேவாக் இன்று வெளியிட்ட டிவிட்டில், தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் அமைதி வழியில் செல்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அமைதிவழியை தொடருங்கள். இந்த அறப்போராட்டம் எல்லோருக்கும் பாடம் என கூறியுள்ளார்.

மற்றொரு ட்விட்டில் தமிழகத்தில் உச்சநீதிமன்றத்தை மதித்தபடியே, நடைபெறும் அமைதி போராட்டம் பற்றிய போட்டோ மீம் ஒன்றை ரீடுவிட் செய்துள்ளார். அந்த மீம் தேசிய ஊடகங்கள் இப்போராட்டத்தை புறக்கணிப்பது குறித்தும் ஆதங்கப்பட்டுள்ளது.

அறவழி போராட்டம்

சேவாக் வெளியிட்டுள்ள இந்த இரு ட்விட்டுகளும் கண்டிப்பாக தேசிய. ஏன் சர்வதேச ஊடகங்கள் கவனத்தை கூட ஈர்க்கும் வாய்ப்புள்ளது. ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராடும் தமிழர்களின் பொறுமைக்கு பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது என்றுதான் இதை கூற வேண்டும்.

முகமது கைப்

கிரிக்கெட் வீரர் முகமது கைப் ஏற்கனவே அறவழி ஜல்லிக்கட்டு போராட்டத்தை பார்த்து வியப்பு தெரிவித்து ட்விட் செய்திருந்தார். முன்னணி வீரர்களும் இதேபோல தங்கள் ஆதரவை தெரிவிக்கும்போது இயல்பாகவே தேசிய அளவில் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்