அவலூர்பேட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      விழுப்புரம்

செஞ்சி

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அவலூர்பேட்டையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் வியாழன் அன்று ஈடுபட்டனர்.

 

மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அங்காடி வீதியிலுள்ள எம்.ஜிஆர் சிலை அருகில் கல்லூரி மாணவர்கள்,பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு கட்சியினர் ஜாதி மத இன வேறுபாடின்றி கலந்துகொண்டு போராட்டம் நடத்தினர். முதலில் கூட்டமாக அமர்ந்து தங்கள் கையில் ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவான,பீட்டாவிற்கு எதிரான வாசகங்களை எழுதிய அட்டைகளை ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர். ஜல்லிக்கட்டை உடனே நடத்து. பீட்டா அமைப்பை நீக்கு, தமிழன் உரிமையை பறிக்காதே, ஜல்லிக்கட்டை நடத்த உடனே அனுமதிக்க வேண்டும் மற்றும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பி முழங்கினர்.பின்னர் அனைவரும் மனித சங்கிலிபோராட்டம் நடத்தினர். திரளான பேர் கலந்து கொண்ட இந்த சங்கிலி அங்காடிவீதியிலிருந்து மேல்மலையனூர் கூட்டு சாலைவரை நீண்டிருந்தது. போரட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று போராட்டக்குழுவினர் கூறினர். காவல்துறையின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: