வெறிச்சோடிய ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோட்டில் இருந்து செல்லும், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், ரயில்வே ஸ்டேஷன் வெறிச்சோடியது. ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி மாணவர்கள், பொதுமக்கள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. தென் தமிழகத்தில் பல இடங்களில், ரயில் மறியலும் நடக்கிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்களின் சேவையை, தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது. ஈரோடு வழியே செல்லும் திருச்சி பாசஞ்சர், நாகர்கோவில் - கோவை பாசஞ்சர், சென்னை - ஆலப்புழா விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்களை குறிப்பிட்ட பகுதி வரை மட்டும் இயக்க, அனுமதிக்கப்பட்டுள்ளது. முழுமையான ரயில் சேவை இல்லாததால், பயணிகள் தங்கள் பயண திட்டத்தை மாற்றி அமைத்து கொண்டுள்ளனர். இதனால் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் நேற்று பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: