நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சங்கர் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      நீலகிரி
DSC 7836 copy

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர்.  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 93 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

          பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர். அவர்களிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  மாவட்ட கலெக்டர்  உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர்.  அறிவுறுத்தினார்.

          இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோத்தகிரியை சார்ந்த கே.ஸ்ரீனிவாசன் என்பவருக்கு வேளாண் பொறியில் துறை சார்பாக ரூ.25 இலட்சம் மதிப்பிலான இரண்டு டிராக்டர்களை ரூ.10 இலட்சம் மானியத்தில்  மாவட்ட கலெக்டர்  வழங்கினார்.

                 இந்நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர் (மனுக்கள்) பரமசிவம், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரத்தினம், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கே.சங்கர்லால், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: