சீனப் பெருஞ்சுவர் பற்றி அனைவருக்கும் தெரியும்! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி உங்களுக்கு தெரியுமா?

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      மாணவர் பூமி
cina

Source: provided

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்?

சீனப் பெருஞ்சுவர், இதனைப்பற்றி கேள்விப்பட்டிராதவர்களே இருக்க முடியாது. கிட்டத்தட்ட 2,000 கி.மீ நீளமுடைய இந்த பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. எங்கோ சீனாவில் இருக்கும் இந்த இடத்தை பற்றி அறிந்திருக்கும் நமக்கு ராஜஸ்தானில் இருக்கும் கும்பல்கர்க் கோட்டையை (Kumbhalgarh Fort) பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கும்பல்கர்க் கோட்டையை (Kumbhalgarh Fort) பற்றி சில தகவல்கள் இதோ!

சீன பெருஞ்சுவருக்கு அடுத்த உலகின் 2வது பெருஞ்சுவராக விளங்குகிறது. பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த மலைக் கோட்டை 15ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டு, இந்த கோட்டை யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய குழுவினரால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீற்றர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையின் எல்லை சுவர்களின் நீளம் மட்டுமே சுமார் 36 கி.மீ நீளம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 36 கி.மீ சுவர் தான் உலகளவில் மிகபெரியதான சீன பெருஞ்சுவருக்கு அடுத்து மிகப்பெரிய சுவராக அமைந்துள்ளது. இந்த எல்லை சுவரின் முன் சுவர்களின் அகலம், சுமார் 15 அடிகள் தடிமனாக அமைந்திருக்கும். மேலும் இந்த கோட்டையில் 7 பலத்த பாதுகாப்பான நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன.

இந்த கோட்டைக்குள் சுமார் 360 கோவில்கள் உள்ளதாகவும், அவற்றில் 300 பழமைவாய்ந்த சமண மத கோவில்களும், 60 இந்து மத கோவில்களும் உள்ளதாக கூறுகின்றனர். இந்த கோட்டைக்குள் ஏன் இத்தனை கோவில்களை கட்டியுள்ளனர் என்பதும் மர்மமாகவே உள்ளது. இதுபோல் பல மர்மங்களை உள்ளடக்கியதாக கருதப்படும் இந்த கோட்டைச் சுவர் பல நூற்றாண்டுகளை கடந்தும் பெருமளவில் சேதமாகாமல் கம்பீரமாக நிற்கிறது. ஆனால் இந்திய பெருஞ்சுவர் என அழைக்கப்படும், உலகின் 2வது மிகப்பெரிய பெருஞ்சுவரான இதனை பற்றி உலகில் பலரும் அறியாமல் உள்ளது தான் வியப்பையும், மர்மத்தையும் ஏற்படுத்துகிறது.

மேலும், இந்த சுவர் கட்டப்பட்டது பற்றி சுவாரஸ்யமான கதை ஒன்றையும் புராணத்தில் கூறியுள்ளனர்.

கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) வரலாறு : 1443-ம் ஆண்டு இந்த கோட்டை சுவரை மன்னர் ராணா கும்பா கட்ட முயற்சித்த போதெல்லாம் மீண்டும் மீண்டும் இன்னல்கள் வந்த வண்ணமே இருந்துள்ளன. அப்போது ராணா கும்பாவிடம் ஆன்மிகவாதி ஒருவர், யாராவது உயிர்பலி கொடுக்க தாமாக முன்வந்தால் இந்த சுவரை கட்ட வரும் தடைகள் அனைத்தும் விலகும் என்று யோசனை கூறியுள்ளார்.

மேலும், அவ்வாறு நரபலி கொடுக்கப்படும் நபரின் தலை விழும் இடத்தில் கோவில் ஒன்று கட்டப்பட வேண்டும் என்றும், அந்த நபரது உடல் விழும் பக்கத்தில் கோட்டையும், கோட்டைச் சுவரும் கட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். எதிர்பார்த்தது போலவே பலகாலமாக உயிர் பலி கொடுக்க யாரும் தாமாக முன்வராத சூழ்நிலையே நிலவியுள்ளது.

பின்னர் ஒருநாள் யாத்ரீகர் ஒருவர் உயிர்பலி கொடுக்க முன்வந்துள்ளார். இதையடுத்து சடங்குகள் சம்பிரதாயத்துடன் அந்த நபரின் உயிர் பலியிடப்பட்டுள்ளது. இதனை விளக்கும் விதமாகவும் அந்த தியாகத்தை போற்றும் விதமாகவும் அந்த கோட்டையின் பிரதான வாசலான Hanuman Pol அருகே நினைவு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

எந்த தாக்குதல்களாலும் நிலைகுலையாத இந்த கோட்டை, ஒரே ஒரு முறை மட்டுமே போரில் தோல்வியை சந்தித்துள்ளது. மொகலாய பேரரசர் அக்பர், அம்பரின் மன்னன் ராஜா மான் சிங், மார்வாரின் அரசர் ராஜா உதய் சிங் போன்ற அனைவரும் ஒன்றினைந்து இந்த கோட்டையை எதிர்த்து போரிட்டபோது ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையால் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 360 கோவில்களை உள்ளடக்கியுள்ள இந்த கோட்டை, உலகின் அறியப்படாத மர்மம் நிறைந்த புதையலாகவே விளங்குகிறது.இந்த மலைக்கோட்டை உதைப்பூரில் இருந்து வடமேற்கு திசையில் 82 கி.மீட்டரில் அமைந்துள்ளது.

 

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: